வேறொருவருடன் உல்லாசம் - வெளிநாட்டில் உள்ள கணவனிடம் காட்டிக் கொடுத்த மகளை கொன்ற தாய்!

ஜனவரி 28, 2019 561

சேலம் (28 ஜன 2019): வேறொரு ஆணுடன் உல்லாசம் அனுபவித்ததை பார்த்த மகள் அதை தந்தையிடம் காட்டிக் கொடுத்ததால் தாயே மகளை கொலை செய்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள இலுப்பநத்தத்தில் கொள்ளை கும்பல் தனது மகளை கொள்ளை கும்பல் கிணற்றில் தள்ளி விட்டதாக கூறி பிரியங்கா காந்தி என்ற பெண் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

ஆனால் போலீஸ் விசாரணையில் அது வெறும் நாடகம் என்று தெரிய வந்துள்ளது. தாயே தனது கள்ளக் காதல் மகளுக்கு தெரிந்ததால் அதனை சிங்கப்பூரில் உள்ள தந்தையிடம் கூறியதாலும் அவர் ஊருக்கு வந்தால் மேலும் பல தகவல்களை அவள் கூற வாய்ப்பு உள்ளதால் மகளை நானே கொலை செய்ததாக பிரியங்கா காந்தி போலீஸ் விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளார்.

இவ்விவகாரம் சேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...