மிரட்டும் பாஜக பிரமுகர் - பெண் தற்கொலை முயற்சி!

ஜனவரி 28, 2019 423

நாகர்கோவில் (28 ஜன 2019): நாகர் கோவிலில் ரூபாய் 90 ஆயிரத்தை மோசடி செய்ததோடு மிரட்டலும் விடுகிறார் என்று பெண் ஒருவர் பாஜக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

நாகர்கோவில் சௌராஷ்டிர தெரு பகுதியை சேர்ந்தவர் ஜான் கென்னடி. இவரது மனைவி ராணி. இவர்களுக்கு சோனியா என்ற மகள் உள்ளார். இவர் மதுரையை சேர்ந்த பாஜக பிரமுகர் ராம் மோகன் என்பவருக்கு சொந்தமான சௌராஷ்டிர தெருவில் உள்ள வீட்டை கடந்த 2001 ஆம் ஆண்டு ஒத்திக்கு வாங்கியுள்ளார். அதற்காக 90 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும், ஒத்தி காலக்கெடு முடிந்தும் அதற்கான பணத்தை திருப்பி கொடுக்காமல் வாடகையை மட்டும் ராம் மோகன் வாங்கி வந்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில் வீட்டை மாற்ற கென்னடி குடும்பத்தினர் முடிவு செய்து ஒத்திக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் பணத்தை திருப்பித் தராமல் மிரட்டியுள்ளார். மேலும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசில் பாஜக பிரமுகர் பொய் புகார் அளித்ததாகவும் கூறி பாஜக பிரமுகர் ராம்மோகன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்ற ராணி என்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...