உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!

ஜனவரி 30, 2019 400

சென்னை (30 ஜன 2019): சில நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்த தங்கம் விலை, நேற்று முன்தினம் புதிய உச்சத்தை தொட்டது. இதுவரை இல்லாத அளவு ரூ.25 ஆயிரத்தை தங்கம் விலை கடந்தது.

சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 127-க்கும், பவுன் ரூ.25 ஆயிரத்து 16-க்கும் விற்பனை ஆனது. இந்நிலையில் கிராமுக்கு ரூ.18 உயர்ந்து ரூ.3 ஆயிரத்து 145-க்கும், பவுனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.25 ஆயிரத்து 160-க்கும் தங்கம் நேற்று விற்பனை ஆனது. இந்த மாதத்தின் அதிகபட்ச விலை ஏற்றமாக இது பதிவாகி இருக்கிறது.

வெள்ளியின் விலையும் நேற்று அதிகரித்தது. கிராமுக்கு ரூ.40 பைசா உயர்ந்து ரூ.43.60-க்கும், கிலோவுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.43 ஆயிரத்து 600-க்கும் வெள்ளி விற்பனை ஆனது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...