உங்களுக்கு தலைவர் மட்டும்தான் எனக்கு தந்தையும் கூட - கலங்கிய ஸ்டாலின்!

ஜனவரி 31, 2019 430

ஈரோடு (31 ஜன 2019): கலைஞர் சிலை திறப்பு விழாவில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை நினைத்து திமுக தலைவர் ஸ்டாலின் கண் கலங்கினார்.

மறைந்த தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை, அவரது குருகுலமான ஈரோட்டில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.

அப்போது அவர் உரையாற்றும்போது, "கலைஞர் என்ற ஒரு மாபெரும் தலைவரை நீங்கள் இழந்திருக்கிறீர்கள். ஆனால், நான் அந்தத் தலைவர் மட்டுமல்ல, என் தந்தையையும் சேர்த்து இழந்திருக்கிறேன். என்னைப் பெற்றெடுத்தது மட்டுமல்ல, தலைவராக என்னை உயிர்ப்பித்து, அவரது சிலையைத் திறக்கும் தகுதியை எனக்கு வழங்கியதும் அவரேதான். தலைவர் கலைஞரின் சிலையைத் திறந்த அந்தக் கணத்தில் என் எண்ணம், சிந்தனையெல்லாம் எங்கோ சென்றது. ஒருவித உணர்ச்சிமயமான நிலைக்கு நான் சென்றேன்” எனத் தழுதழுத்துப் பேசினார்.

ஏற்கனவே கடந்த டிசம்பர் 16-ம் தேதி, அவருடைய முழு உருவச் சிலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டது. அதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கலைஞரின் சிலையை அமைக்க தி.மு.க-வினர் மும்மராக வேலைசெய்துவருகிறமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...