தீவைத்து விரட்டினோம் - ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து காவல்துறை விளக்கம்!

பிப்ரவரி 02, 2019 328

மதுரை (02 பிப் 2019): ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தேன் குளவிகளிலிருந்து பொதுமக்களை காப்பாற்ற தீப்பந்தம் வைத்து தேனீக்களை விரட்டினோம் என்று போலீள் விளக்கம் அளித்துள்ளது.

பல போராட்டங்களில் கிடைக்காத வெற்றி பொதுமக்கள் தன்னெழுச்சியாக பேராடியதன் விளைவு. ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுத் தொடர்பான இறுதிக்கட்ட விசாரணை மதுரையில் நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டுப் போராட்டக் குழு விசாரணை ஆணைய தலைவர் ராஜேஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசியபோது,

``அலங்காநல்லூர் போராட்டத்தின் முடிவில் காவல்துறை செய்தது சரி என்றே அதிகமானோர் விசாரணையில் தெரிவித்துள்ளனர். 22-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த வந்த அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராகப் போராடியதாகவும் நாங்கள் நடத்த நினைத்தபோதும் போராட்டத்துக்கு வந்தவர்கள் மக்களை திசை திருப்பியதாகவும் தெரிவித்தனர். சென்னையில் வாகனங்களுக்குக் காவல்துறை தீ வைத்த சம்பவம் குறித்து விளக்கம் கொடுத்தவர்கள், தேன்கூடு மீது கல் எறிந்தபோது குழவிகள் மக்களைக் கொட்ட வந்ததாகவும் அதைத் தடுக்க காவல்துறையினர் தீப்பந்தத்தை வைத்து விரட்டியதாகவும் சாட்சியம் அளித்துள்ளனர்’’ இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...