பொது மேடையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் உளறல்!

பிப்ரவரி 03, 2019 384

திண்டுக்கல் (03 பிப் 2019): இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது பிரதமர் வாஜ்பாய் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறிக் கொட்டி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் எம்.ஜி.ஆரின் 102வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார்.

அப்போது விழாவில் பேசிய அவர், மத்திய அரசின் இந்த பட்ஜெட் ஏழை எளிய மக்களுக்கு பயன் பெறும் விதமாக இருப்பதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிரதமர் வாஜ்பாய் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என கூறினார்.

இவருடைய இந்த சர்ச்சை பேச்சால் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இவரெல்லாம் எப்படி அமைச்சராக இருக்கிறார் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...