திமுகவுக்கு தாவுகிறாரா தம்பிதுரை?

பிப்ரவரி 04, 2019 363

சென்னை (04 பிப் 2019): அதிமுகவில் இருந்து கொண்டு பாஜக வை தொடர்ந்து தாக்கி பேசிவரும் தம்பிதுரை திமுகவில் இணையலாம் என்று தகவல் கசிந்துள்ளது.

சமீபகாலமாக பாஜக குறித்தும் மோடி குறித்தும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் தம்பிதுரை. அதிமுகவில் இருந்துக்கொண்டு இவர் மட்டும்தான் பாஜகவை அடிக்கடி விமர்சித்து வருகிறார்.

இதோடு மட்டுமல்லாமல் கட்சிக்குள் உள்ள அதிருப்தி காரணமாக தம்பிதுரை அதிமுகவில் இருந்து விலகவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கு விளக்கமளித்த தம்பிதுரை, பாஜகவின் கொள்கைகள் சில சரியாக இல்லாததால் தான் பாஜகவை விமர்சிக்கிறேன். அதிமுகவின் எம்எல்ஏக்களை பாஜக கிள்ளுக்கீரை போல் நினைக்கிறது. எங்கள் கட்சி நபர்களை பாஜகவினர் ஒழுங்காக நடத்துவதில்லை. அதனால் தான் அவர்களை விமர்சிக்கிறேன் என கூறினார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, தவறான இடத்தில் இருக்கும் சரியான நபர் தம்பிதுரை. பாஜகவை பற்றி தம்பிதுரைக்கு தற்போது தெரிந்துவிட்டது. அதேபோல் அங்குள்ள மற்றவர்களுக்கு இது தெரியவரும் என கூறினார். ஏற்கனவே தம்பிதுரை திமுகவில் இணைய இருக்கிறார் என வதந்தி கிளம்பிவரும் நிலையில் கனிமொழி இப்படி கூறியிருப்பது தம்பிதுரை திமுகவில் இணையலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...