திருச்சி பெண்கள் சிறை வார்டன் தற்கொலை சம்பவத்தில் திடீர் திருப்பம்!

பிப்ரவரி 05, 2019 403

திருச்சி (05 பிப் 2019): திருச்சி பெண்கள் சிறை வார்டன் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக அவரது காதலன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த செல்லப்பன் மகள் செந்தமிழ்செல்வி (வயது 23). இவர் திருச்சி பெண்கள் சிறையில் வார்டராக பணியாற்றி வந்தார். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறைக்காவலர் குடியிருப்பில் ஒரு வீட்டில் தனியாக தங்கி பணிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு செந்தமிழ்செல்வி பணிக்கு வரவில்லை. சக வார்டர்கள் அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது.

இதனால் செந்தமிழ் செல்வியின் வீட்டிற்கு வார்டர்கள் சிலர் இரவு 8 மணி அளவில் சென்றனர். அங்கு அவரது வீடு உள்பக்கமாக பூட்டப் பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது, செந்தமிழ் செல்வி வீட்டின் படுக்கை அறையில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப் போட்டபடி பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...