அதிமுக பாஜக கூட்டணியில் பாஜகவுக்கு 8 இடங்கள்!

பிப்ரவரி 06, 2019 406

சென்னை (06 பிப் 2019): அதிமுக பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதி செய்யப் பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுகவும் பாஜகவும் ஒன்றுசேர திட்டமிட்டிருப்பதாக நீண்ட காலமாகக் கூறப்படும் கணிப்பும் கிட்டத்தட்ட உறுதியாவிட்டது. இது பற்றி நம்பத்தக்க வட்டாரத்திலிருந்து தகவல்கள் வந்துள்ளன.

அதிமுகவின் உயர்மட்டக் குழுக்கூட்டம் திங்கள் கிழமை முதல் வேட்புமனு விண்ணப்பங்களை பரிசீலித்து வருகிறது. இதனிடையே கூட்டணி பற்றிய பேச்சும் நடக்கிறதாக கூறப்படுகிறது. வரும் பிப்ரவரி 10ஆம் தேதியை ஒட்டி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரும் எனக் கூறப்படுகிறது.

மேலும் பாஜகவுக்கு 8 இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளதாகவும், பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் மாநில தலைவர் தமிழிசையும், கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணனும், ஸ்ரீபெரும்புதூரில் இல.கணேசனும், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணனும், திருப்பூரில் வானதி சீனிவாசனும், சிவகங்கையில் ஹெச்.ராஜாவும் களம் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம், கே.எஸ்.நரேந்திரன் ஆகியோருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் பாமக, தேமுதிக, தாமக உள்ளிட்ட கட்சிகளையும் இந்த கூட்டணியில் இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப் பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...