நாகூர் தர்காவிற்கு இலவச சந்தன கட்டை - தமிழக அரசு அரசானை வெளியீடு!

பிப்ரவரி 06, 2019 329

சென்னை (06 பிப் 2019): நாகூர் தர்காவிற்க்கு இலவச சந்தன கட்டை தமிழக அரசு அரசானை வெளியிட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் நாகூர் தர்கா உலக புகழ்பெற்றதாகும். 462வது வருடாந்திர கந்தூரி விழா பிப்ரவரி 6ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கப்பட்டு விட்டது. இங்கு அடங்கியிருக்கும் நாகூர் பெரிய ஆண்டவர் ஷாகுல் ஹமீது பாதுஷா ஆண்டகையின் சமாதியில் வரும் 16ம் தேதி அதிகாலையில் சந்தனம் பூசும் திருவிழா நடைபெற இருக்கிறது, வருடாந்தோறும் பல லட்சகணக்கான மக்கள் பெரும் திரளாக இங்கு கூடுவர். வருடாந்தோறும் இந்த கந்தூரி சந்தன திருவிழாவிற்க்கு தமிழக அரசு சார்பாக 40 கிலோ இலவச சந்தன கட்டைகளைவழங்கி வருகிறது . அது கடந்த வருடம் 17 கிலோவாக குறைத்து வழங்கப்பட்டது . கூடுதலாக வழங்க வேண்டும் என தர்கா ஆதீனஸ்தர்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வருடம் தமிழக அரசு சார்பாக 20 கிலோ இலவச சந்தன கட்டைகளை வழங்க உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. அதன் அரசாணை இன்று தலைமை செயலகத்தில் வெளியிடப்பட்டது.

கடந்த 2012 ம் ஆண்டு நாகூர் தர்கா பரம்பரை ஆதீனம் ஹஜ்ரத் அல்ஹாஜ் எஸ் செய்யது காமில் சாஹிப் காதிரி, நாகூர் தர்காவில் நடைபெறும் வருடாந்திர கந்தூரி விழாவில் அதிகமான மக்கள் பங்கு பெறுவதால் இலவச சந்தன கட்டை வழங்க மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் கோரிக்கை வைத்தார். அதனை பரிசீலித்த முதல்வர் விலையில்லா சந்தன கட்டைகளை வழங்கினார். அதன்படி வருடாந்தோறும் 40 கிலோ சந்தன கட்டைகள் அரசு சார்பாக விலையில்லாமல் அரசானை வழங்கப்பட்டு வருகிறது . கடந்த வருடங்களைப்போல் அரசாணை நாகூர் தர்கா காமில் சாஹிப் மற்றும் தர்கா இடைக்கால நிர்வாகிகள் பெயரில் அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையில் அரசின் சந்தன கட்டை இருப்பு குறைவாக இருப்பதால் 20 கிலோவாக குறைத்து கொடுக்க படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்: சாகுல் ஹமீது

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...