ரஜினி - திருநாவுக்கரசர் - திருமாவளவன் திடீர் சந்திப்பு!

பிப்ரவரி 06, 2019 427

சென்னை (06 பிப் 2019): நடிகர் ரஜினி மற்றும் திருமாவளவன் ஆகியோர் திருநாவுக்கரசரை அவரது இல்லத்தில் திடிரென சந்தித்துள்ளனர்.

ஏற்கனவே திருநாவுக்கரசர் ரஜினகாந்த் அமெரிக்காவில் சந்தித்து கொண்டதாக செய்திகள் பரவியது. இதனை அடுத்து திருநாவுக்கரசர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப் பட்டார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை அண்ணா நகரிலுள்ள முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார். ஆனால் இந்த சந்திப்பில் ரஜினிகாந்த் தனது மகள் சவுந்தர்யாவின் திருமண விழாவிற்கு நேரில் அழைப்பு விடுக்கவே நேரில் சென்று திருநாவுக்கரசரை சந்தித்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...