பெண் கொலையில் திடீர் திருப்பம் - கொலை செய்தது திரைப்பட இயக்குநர்!

பிப்ரவரி 06, 2019 664

சென்னை (06 பிப் 2019): சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் கடந்த 21ம் தேதி கை, கால் துண்டுதுண்டாக பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட கொலை சம்பவத்தில் திடீர் திருப்பமாக கொலை செய்தது திரைப்பட இயக்குநர் என்பது தெரிய வந்துள்ளது.

கொல்லப்பட்ட பெண் யார் என அடையாளம் தெரியாமல் இருந்தது தற்போது துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட பெண் தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியா என பள்ளிக்கரணை போலீசார் கண்டுபிடித்துள்ள நிலையில் கொலை செய்யப்பட்ட சந்தியாவின் உடலை அடையாறு ஆற்றில் கைப்பற்றியுள்ளனர்.

சென்னை ஜாபர்கான்பேட்டையில் வசித்துவந்த சந்தியா என்ற அந்த பெண் கொல்லப்பட்டது தொடர்பாக அவரது கணவர் பாலகிருஷ்ணனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் எஸ் ஆர். பாலகிருஷ்ணன் என்ற அவர் அண்மையில் நடந்த திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட்டுள்ளார். மேலும் பாலகிருஷ்ணன் ''காதல் இலவசம்'' என்ற படத்தையும் இயக்கியுள்ளார். அந்த படமானது 2015ல் வெளியானது. அதை தயாரித்தது கொலையான சந்தியா என்பது தெரியவந்துள்ளது.

எப்படி இந்த கொலை நடந்தது, சம்பந்தப்பட்ட பெண் சந்தியாவை அவர் எப்படி கொலை செய்தார், எந்த காரணத்திற்காக கொலை செய்தார் என்ற முதல்கட்ட விசாரணையில் பாலகிருஷ்ணனின் மனைவியான சந்தியா பல ஆண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், ஐந்தும் முறை வீட்டை விட்டு வெளியேறியதாகவும் இதுகுறித்து பலமுறை பாலகிருஷ்ணன் எச்சரித்தும் சந்தியா கேட்க்காததால் ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன் சந்தியாவை வெட்டி கொன்று உடல் பாகங்களை வீசி எறிந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் அவரது உடல் பாகங்கள் எங்கு வீசப்பட்டது என்று போலீசார் தீவிரமாக நடத்திய விசாரணையில் சந்தியாவின் கழுத்து முதல் இடுப்பு வரையிலான உடல் பகுதியை ஜாபர்கான்பேட்டை பகுதியிலுள்ள அடையாற்றில் வீசியதாக தெரிவித்துள்ளார். அதனை அடுத்து பாலகிருஷ்ணனை அந்த இடத்திற்கு நேரில் அழைத்து சென்று வீசிய இடத்தை அடையாளம் காட்ட சந்தியாவின் கழுத்து முதல் இடுப்பு வரையிலான உடலை தற்போது கைப்பற்றியுள்ளனர். மேலும் கொலை செய்யப்பட்ட சந்தியாவின் தலையை போலீசார் கைப்பற்ற முயன்று வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...