நான் முகத்திரை அணிந்தது என் விருப்பம் - ஏ.ஆர்.ரஹ்மான் மகள் பொளேர் பதில்!

பிப்ரவரி 07, 2019 769

சென்னை (07 பிப் 2019): ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா முகத்திரை அணிந்து மேடையில் தோன்றியதை பலர் விமர்சித்துள்ள நிலையில் அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் கதீஜா.

சமீபத்தில் மும்பையில் '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜாவும் ரஹ்மானும் கலந்துரையாடியது மிகப் பரவலாய் பேசப்பட்டது. அந்த நிகழ்வில் கதிஜா, தன் முகத்தைப் பர்தாவால் முழுதாக மூடியிருந்தார். இது சமூகவலைதளங்களில் ரஹ்மான் பிற்போக்குவாதி, அவர் மகளை வற்புறுத்தி இப்படி செய்யச் சொல்லியிருக்கிறார் பலர் விமர்சித்திருந்தனர்.

இந்நிலையில் விமர்சகர்களுக்கு கதிஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தக்க பதிலடி கொடுத்துள்ளார். , ``நானும், அப்பாவும் மேடையில் பேசிக்கொண்டது இவ்வளவு பரவலாக பேசப்படுமென்று நான் எதிர்பார்க்கவேயில்லை. அதேசமயம், நான் அணிந்திருந்த முகத்திரை என் தந்தையின் வற்புறுத்தலாலே நடந்தது என்றும், அவர் உள் ஒன்று புறம் ஒன்று என இரட்டை நிலைகொண்டவர் என்ற பேச்சுகளையும் ஆங்காங்கே காண முடிந்தது. நான் உடுத்தும் உடையோ அல்லது என் தோற்றமோ, நான் என் வாழ்க்கையில் தேர்ந்தெடுக்கும் தேர்வுகளுக்கோ எனது பெற்றோர்களுக்கு துளியும் சம்பந்தம் கிடையாது. நான் முழுமையாக ஏற்று, பெருமையுடனும் சுய விருப்பத்துடன்தான் பர்தாவை அணிந்திருக்கிறேன். எனக்கு எது வேண்டுமென்று தேர்ந்தெடுக்கும் அளவுக்கு நான் வளர்ந்துள்ளேன். எந்த ஒரு தனி மனிதனுக்கும் அவர்கள் எது அணிய வேண்டுமென்ற சுதந்திரம் இருக்கிறது. அதைத்தான் நானும் செய்திருக்கிறேன். விவரம் தெரியாமல் யாரையும் எடைபோடாதீர்கள்" எனப்பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே கதீஜாவின் இந்த பதிவு #freedomofchioce என்ற ஹேஷ் டேக்குடன் வைரலாகி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...