இந்து மக்கள் இயக்க தலைவர் கைது!

பிப்ரவரி 08, 2019 530

திருச்சி (08 பிப் 2019): விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாடு குறித்து பேஸ்புக்கில் அவதூறு பரப்பிய இந்து மக்கள் இயக்க தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சியில் கடந்த மாதம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேசம் காப்போம் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இது குறித்து முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இது குறித்து எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தாரரும், சமூக ஆர்வலருமான கணேஷ் (42),பொன்மலை போலீசில் புகார் செய்தார். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் வேலூர் மாவட்டம் தொரப்பாடி பஜனை கோவில் தெருவை சேர்ந்த சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தின் அமைப்பாளர் ராஜகோபாலை வியாழக்கிழமை காலை கைது செய்தனர். மேலும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...