பாஜக தமிழகத்தில் நுழைய முடியாது - தம்பிதுரை மீண்டும் போர்க்கொடி!

பிப்ரவரி 09, 2019 400

திருச்சி (09 பிப் 2019): தமிழகத்தில் பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகள் நுழைய முடியாது என்று அதிமுக எம்பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக பாஜகவுக்கு எதிரான கருத்துகளைப் பொதுவெளியில் தெரிவித்து வருகிறார். இதனால் அதிமுக தலைமை தர்ம சங்கடத்தில் உள்ளது. சமீபத்தில், மத்திய பட்ஜெட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்ற நிலையில், தம்பிதுரை மட்டும் பட்ஜெட்டை விமர்சித்தார்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, "தமிழ்நாட்டுக்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்களோடு தான் அதிமுக கூட்டணி அமைக்கும் என முதல்வர் கூறியுள்ளார். தமிழ்நாட்டுக்கு யார் நல்லது செய்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். காலப்போக்கில் தான் அது தெரியும்.

தமிழ்நாட்டில் பாஜக தலைவர்கள் திராவிடக் கட்சிகளை வரவிட மாட்டோம் என்கிறார்கள் தேசியக் கட்சி என சொல்லிக்கொள்ளும் இவர்களை நாங்கள் எப்படி வரவிடுவோம்?" என தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...