திருப்பூர் விழாவில் மீண்டும் தமிழகத்தை அவமதித்த மோடி!

பிப்ரவரி 10, 2019 416

திருப்பூர் (10 பிப் 2019): திருப்பூர் விழாவில் மீண்டும் தமிழ் தாய் வாழ்த்து தேசிய கீதம் இல்லாமல் அரசு விழா நடத்தப் பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை திருப்பூர் வந்த பிரதமர் மோடிதிருப்பூரில் அமையவுள்ள 470 படுக்கை வசதிகள் கொண்ட இ.எஸ்.ஐ மருத்துவமனை, திருச்சி விமான நிலையத்தின் புதிய கட்டடம், சென்னை டி.எம்.எஸ் - வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரோ ரயில் சேவை ஆகியவற்றை காணொளி மூலம் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் இவ்விழாவில் மரபுப்படி தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஒலிக்கப் பட வேண்டும் ஆனால் அது நிறைவேற்றப் படவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் நரேந்திர மோடி கலந்துகொண்டபோதும், அந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்படாதது விமர்சனத்துக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...