ராமலிங்கம் படுகொலை வழக்கை சிபிசிஐடி யிடம் ஒப்படைக்க தமுமுக கோரிக்கை!

பிப்ரவரி 10, 2019 518

சென்னை (10 பிப் 2019): ராமலிங்கம் படுகொலை வழக்கை சிபிசிஐடி யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமுமுக கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்து அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் ஜெ.ஹைதர் அலி வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருபுவனம் ராமலிங்கம் படுகொலையில் கொலையாளிகள் ராமலிங்கத்தின் மகனை கொலை செய்ய வந்ததாகவே தெரிகிறது. அதனை தடுக்கப் போன ராமலிங்கம் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

இதற்கிடையே கொலையாளிகள் எனக் கூறி இதுவரை முதலில் ஐந்து பேரும், அடுத்து மூன்று பேரும் கைது செய்யப் பட்டுள்ளனர். ராமலிங்கத்தின் மகன் ஷ்யாம் கொலையாளிகளை நேரில் பார்த்தால் அடையாளம் கட்ட தயார் என்று கூறுகிறார். அதேவேளை ஒரு பத்திரிகை தொலைபேசி உரையாடலில், கைதானவர்கள் யாரும் கொலையாளிகள் இல்லை என்றும் கூறுகிறார்.

தேர்தல் நேரத்தில் இச்சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இஸ்லாமியர்கள் மீது வேண்டும் என்றே பழி போடவும், மதக் கலவரங்களை ஏற்படுத்தவும் இந்த கொலை நிகழ்த்தப் பட்டிருக்கலாம் என சந்தேகத்தை கிளப்புகிறது. எனவே இந்த வழக்கை சிபிசிஐடியிடம் ஒப்படைப்பதோடு, 8 பேர் மீது போடப்பட்டுள்ள யுஏபிஏ உள்ளிட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் எனவும் தமுமுக வலியுறுத்துகிறது"

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...