தோல்வி பயம் - தேர்தலில் போட்டியிட விரும்பாத அதிமுக எம்.பிக்கள்!

பிப்ரவரி 12, 2019 297

சென்னை (12 பிப் 2019): வரும் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தால் அதிமுக எம்பிக்கள் சிலர் தேர்தலில் போட்டியிட அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிமுக எம்பிக்கள் நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள தகவலில், ‘மக்களவை தேர்தலில் பிரச்சார செலவு தொகுதிகளுக்கு ஏற்றபடி பல கோடிகள் ஆவது வழக்கம். இதற்கான பெரும்பங்கு எங்கள் கட்சித் தலைவர் ஜெயலலிதா இருந்த போது கிடைத்தது போல்இனி கிடைக்கும் என்றநம்பிக்கை இல்லை. அவரின்றி கட்சியின் வெற்றியும் கேள்விக்குறியான நிலையில், தமது சொந்தப்பணத்தை செலவு செய்ய பலரும் முன்வராமல் உள்ளனர்’ எனத் தெரிவித்தன.

இதனிடையே, போட்டியிட விருப்பம் இல்லாவிட்டாலும் அனைத்து எம்பிக்களும் விருப்ப மனு அளிக்க வேண்டும் எனஅவர்கள் தலைமை வலியுறுத்தி இருப்பதாகத் தெரிகிறது. இதன்காரணமாக பெரும்பாலானஎம்பிக்கள் விருப்ப மனு அளித்துள்ளனர். மீதியுள்ளவர்களும் பிப்ரவரி 14-க்குள் மனு அளித்துவிட இருப்பதாகவும் கூறுகின்றனர்.

இன்றுவரை சுமார் 1,500 பேர்மட்டுமே மனு அளித்துள்ளனர். இந்த மனு எண்ணிக்கை, 2014 மக்களவை தேர்தலின்போது பத்தாயிரத்தை தாண்டி இருந்தது. கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவினர் அளித்தவிருப்ப மனுக்களின் எண்ணிக்கை 26,174 ஆகும். இதில், கட்சியின்பொதுச்செயலாளராக இருந்துவந்த ஜெயலலிதா பெயரில் கட்சியினர் அளித்த விருப்ப மனுக்களின் எண்ணிக்கை 7,936 என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோல், இந்தமுறை எவரும்தம் தற்போதைய கட்சித் தலைவர்கள் பெயரில் கட்டணம் செலுத்தி மனு அளித்ததாகத் தெரியவில்லை.

இது குறித்து அதிமுக எம்பிக்கள் வட்டாரம் மேலும் கூறும்போது, ’மனு அளித்தவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு என்பதும் எங்கள் கட்சியில் உறுதியில்லை. எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்களை பொறுத்து குறிப்பிட்ட தொகுதிகளில் கடைசி நேரத்தில் மனு அளிக்காதவர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகளும் உள்ளன. ஒருமுறை சட்டப்பேரவைக்கு போட்டியிட்ட பதர் சயீதிடம்பின்னரே விருப்பமனு கேட்டு பெறப்பட்டது’ எனத் தெரிவித்தன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...