ராமலிங்கம் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது!

பிப்ரவரி 12, 2019 579

கும்பகோணம் (12 பிப் 2019): திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக முகமது இப்ராஹிம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொலையாளிகள் பயன்படுத்திய கார் திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து காரின் உரிமையாளர் எனக் கூறி முகமது இப்ராஹிம் என்பவரை போலீசார் கைது செய்து, கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவரை வரும் 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து முகமது இப்ராஹிம் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே படுகொலை சம்பவத்தை கண்டித்து, இந்து அமைப்புகள் கும்பகோணத்தில் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக ஆயிரத்தும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன. தெருக்களில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாக இருந்ததால், கும்பகோணம் களையிழந்து காணப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...