தம்பிதுரைக்கு ஆதரவாக களமிறங்கிய ஜெயகுமார்!

பிப்ரவரி 12, 2019 324

சென்னை (12 பிப் 2019): பாஜகவை தம்பிதுரை எம்பி விமர்சித்து வரும் நிலையில் அவர் விமர்சிப்பதில் தவறில்லை என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மக்களவை தேர்தலில், தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்கும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. இதை சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர்கள் இதுவரை மறுக்கவில்லை. ஆனாலும், அதிமுக எம்.பி. தம்பிதுரை பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

குறிப்பாக, நேற்று டெல்லியில் மக்களவையில் நடைபெற்ற பட்ஜெட் விவாதக் கூட்டத்தில் பேசிய தம்பிதுரை பாஜக அரசின் திட்டங்களை காரசாரமாக விமர்சித்துப் பேசினார். அதற்கு அவையிலேயே ராகுல் காந்தி கைக் கொடுத்து பாராட்டினார்.

பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை என்ற நிலையில், தம்பிதுரையின் தொடர் குற்றச்சாட்டுகள், அதற்கு ராகுலின் நேரடியான ஆதரவு போன்றவற்றை பார்க்கும் போது அது தம்பிதுரையின் தனிப்பட்ட குற்றச்சாட்டா அல்லது அதிமுகவின் குரலா என்பது குழப்பமாகவே உள்ளது.

இந்நிலையில், நேற்று ஓ.பி.எஸ்ஸும் மத்திய அரசின் ஒத்துழையாமை குறித்து சட்டப்பேரவையில் வெளிப்படையாக பேசியுள்ளார். இதனால், அதிமுக – பாஜக கூட்டணி அமையுமா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

இதுஒருபுறம் இருக்க, இன்று சட்டப்பேரவையில் நடந்த தமிழக பட்ஜெட் மீதான இரண்டாம் நாள் விவாதத்தின் போது, ‘தம்பிதுரை பேசியது தனிப்பட்ட கருத்தா அல்லது தமிழக அரசின் கருத்தா’ என திமுக உறுப்பினர் பொன்முடி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல. எந்த திட்டமாக இருந்தாலும் மாநிலங்கள் பாதிக்கப்படும் போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மாநில அரசின் கடமை, இதுவே ஜெயலலிதாவின் கொள்கை. மத்திய அரசு நிதியை தாமதமாக வழங்குவது குறித்து தம்பிதுரை பேசியுள்ளார், அதில் என்ன தவறு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.அ

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...