தேமுதிக பாஜகவுடன் கூட்டணி?

பிப்ரவரி 12, 2019 325

சென்னை (12 பிப் 2019): பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுடனும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது தே.மு.தி.க. மாநில இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தே.மு.தி.க. கொடிநாள் கொண்டாட்டம் கட்சியின் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. தே.மு.தி.க. மாநில இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

"பிப்ரவரி மாத இறுதிக்குள் தே.மு.தி.க. கூட்டணி இறுதி செய்யப்படும். பா.ஜ.க. உட்பட அனைத்து கட்சிகளுடனும் கூட்டணி தொடர்பாக பேசி வருகிறோம்.

அமெரிக்காவில் சிகிச்சையில் உள்ள விஜயகாந்த் 2 வாரத்தில் நாடு திரும்ப உள்ளார். அதன் பிறகு கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும்" என்று கூறினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...