காதலர் தினத்தில் ஆண் நாய்க்கு தாலி கட்டிய இளைஞர் கைது!

பிப்ரவரி 15, 2019 343

சென்னை (15 பிப் 2019): காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்க்கு தாலி கட்டிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை, கொருக்குப்பேட்டை, மன்னப்ப தெருவில், நேற்று காலை, தர்ம ரக் ஷனா சபா மாநில தலைவர், செல்வம், 30, தன் ஆதரவாளர்களுடன், அப்பகுதியில் சுற்றித் திரிந்த, ஆண் நாயின் கழுத்தில், தாலி கட்டி, திருமணம் செய்து கொண்டார்.

இதுகுறித்து, பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், செல்வம் உட்பட நால்வரை கைது செய்து கொருக்குப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாய்க்கு தாலி கட்டியதாக, அவர்கள் தெரிவித்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...