அனைத்து அவசர உதவிகளுக்கும் ஒரே எண் வசதி - தமிழகத்திலும் அறிமுகம்!

பிப்ரவரி 15, 2019 302

புதுடெல்லி (15 பிப் 2019): இனி அனைத்து அவசர உதவிகளுக்கும் ஒரே எண்ணை அழைக்கும் வசதி அறிமுகம் செய்யப் படவுள்ளது.

கடந்த காலங்களில் அவசர போலீஸ் உதவிக்கு ‘100’ என்றும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிக்கு ‘101’ என்றும், ஆம்புலன்சுக்கு ‘108’ என்றும், பெண்கள் பாதுகாப்புக்கு ‘1090’ என்றும் தனித்தனி அவசர உதவி எண்கள் உள்ளன. இந்நிலையில், இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, தேசிய அளவில் ‘112’ என்ற ஒரே உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

112 அழைப்புத் திட்டம் தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், வருகிற 19-ந்தேதி இத்திட்டம் அமலுக்கு வருகிறது.

இத்திட்ட்டம் இமாசலபிரதேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...