டி.ஆர்.பாலு - கனிமொழி டெல்லி விரைவு!

பிப்ரவரி 16, 2019 355

சென்னை (16 பிப் 2019): திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, மற்றும் டி.ஆர். பாலு ஆகியோர் டெல்லி விரைந்துள்ளனர்.

காஷ்மீரில் துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனம் மீது, நடத்தப் பட்ட பயங்கரவாத தாக்குதலில் 42 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர்.

இந்த கொடூர செயலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட அனைத்துக்கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக கூறி இருக்கிறார்கள்.

இந்த நிலையில், வெடிகுண்டு சம்பவம் குறித்து ஆலோசிக்க டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி., டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது. எனவே, நேற்று மாலை, தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அங்கு சென்ற கனிமொழி அதே விமானத்தில் சென்னை திரும்பினார்.

இது போல் திரிசூலம், பொழிச்சலூர் பகுதியில் நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்களில் பங்கேற்க இருந்த டி.ஆர்.பாலு அந்த கூட்டங்களை ரத்து செய்து விட்டு சென்னை விமான நிலையம் வந்தார். பின்னர் இருவரும் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...