பணம் கொடுத்து ஆள் சேர்க்கிறாரா ஸ்டாலின்?

பிப்ரவரி 17, 2019 302

நிலக்கோட்டை (17 பிப் 2019): நிலக்கோட்டை கிராம சபை கூட்டத்திற்கு பணம் கொடுத்து ஆள் சேர்த்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டியில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கிராமங்களில் இருந்து பெண்கள், பள்ளிக் குழந்தைகள், முதியவர்கள் விதிமுறைகளை மீறி டெம்போக்களில் அழைத்து வரப்பட்டனர்

கூட்டத்துக்கு வந்தவர்களுக்கு மேடையின் அருகே தி.மு.க-வினர் பணப்பட்டுவாடா செய்ததாகவும் இதனை படம் பிடிக்க சென்ற செய்தியாளர் ஒருவரை தாக்க முயன்றதாகவும், தி.மு.க-வினர், கேமராவையும் பறிக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...