தங்கம் விலைரூ.1,400 உயர்ந்தது!

பிப்ரவரி 19, 2019 307

சென்னை (19 பிப் 2019): தங்கம் விலை கடந்த 1½ மாதத்தில் மட்டும் ரூ.1,400 உயர்ந்து உள்ளது.

தங்கத்தின் மீதான விலை ஏற்றம் சமீபகாலமாக வாடிக்கையாளர் இதயத்துடிப்பை எகிற செய்து வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த மாதம் புதிய உச்சத்தை தொட்டது.

கடந்த மாதம் 28-ந்தேதி, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 127-க்கும், ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்து 16-க்கும் தங்கம் விற்பனை ஆனது. இதன்மூலம் வரலாற்றிலேயே முதன்முறையாக தங்கம் விலை ரூ.25 ஆயிரத்தை கடந்தது. அதனைத்தொடர்ந்து ஏறுமுகத்தில் வீறுநடை போட்டு வந்த தங்கத்தின் விலை மக்களை பீதியடைய செய்து வருகிறது. அந்த நிலை நேற்றும் தொடர்ந்தது.

சென்னையில் நேற்றுமுன்தினம் கிராம் ரூ.3 ஆயிரத்து 190-க்கும், பவுன் ரூ.25 ஆயிரத்து 520-க்கும் தங்கம் விற்பனை ஆனது. இந்தநிலையில் தங்கம் விலை நேற்றும் உயர்ந்தது. அதன்படி முந்தைய தினத்தை விட கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ரூ.3 ஆயிரத்து 196-க்கும், பவுனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.25 ஆயிரத்து 568-க்கும் தங்கம் நேற்று விற்பனை ஆனது.

இந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி கிராம் ரூ.3 ஆயிரத்து 21-க்கும், பவுன் ரூ.24 ஆயிரத்து 168-க்கும் தங்கம் விற்பனை ஆனது. அந்தவகையில் கடந்த 1½ மாதத்தில் மட்டும் தங்கம் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்து, ரூ.1,400 உயர்ந்து உள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...