அதிமுக ஹெச்.ராஜாவுக்கு வைத்த செக் - அதிர்ச்சியில் ஹெச்.ராஜா!

பிப்ரவரி 19, 2019 1125

சென்னை (19 பிப் 2019): வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி வைத்துள்ள நிலையில் அதிமுகவின் வேண்டுகோளால் ஹெச்.ராஜா அதிருப்தியில் உள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஹெச்.ராஜா விரும்பி இருந்தார். அக்கட்சியின் தலைமையும் அதை ஏற்றுக்கொண்டது. தமிழகத்தில் தேர்தல் கூட்டணி குறித்துப் பேச வந்த பியூஷ் கோயலிடம், ஹெச்.ராஜாவுக்கு தமிழகத்தில் இருக்கும் `செல்வாக்கு' குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது. சாரணர் இயக்கத் தேர்தல் தோல்வி, ஆர்.கே நகர் தோல்வி, பெண் ஊடகவியலாளர்கள் குறித்த சர்ச்சைப் பேச்சு, நீதிமன்றத்தை சர்ச்சையாகப் பேசியது என அவர்மீது புகார்பட்டியல் கொடுக்கப்பட்டது.

இதை பா.ஜ.க தலைமையும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ராஜ்யசபா எம்.பி பதவி தருவதாக ஹெ.ராஜாவுக்கு தலைமை வாக்குறுதி கொடுத்திருக்கிறது. இதனால் அதிருப்தியடைந்த ஹெச்.ராஜா, கூட்டணி அறிவிப்புக்கு வராமல், பெங்களூரு சென்றிருக்கிறார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...