புதுக்கோட்டை அருகே மகளை கர்ப்பமாக்கிய தந்தை கைது!

பிப்ரவரி 20, 2019 413

புதுக்கோட்டை (20 பிப் 2019): புதுக்கோட்டை அருகே மகளை கர்ப்பமாக்கிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அறந்தாங்கியில் வாழ்ந்த முத்துலட்சுமி - சேகர் தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்து 4 மாதங்கள் ஆன போது எதிர்பாராத விதமாக சேகர் மரணமடைந்தார். இதனால், குழந்தையுடன் தனது அப்பா வீட்டிற்கு சென்று முத்துலட்சுமி வாழ்ந்து வந்தார்.

இப்படி இருக்க முத்துலட்சுமிக்கு மினிலாரி டிரைவர் ரவிச்சந்திரன் என்பவருடன் இரண்டாவது திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதன் பின்னர் முதல் கணவருக்கு பிறந்த குழந்தையை அப்பாவிடம் விட்டுவிட்டு இரண்டாவது கணவருடன் மீண்டும் அறந்தாங்கிக்கு குடிபெயர்ந்தார்.

முத்துலட்சுமி - ரவி சந்திரன் தம்பதிடினருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் பிறந்தனர். இந்நிலையில், முதல் கணவரின் குழந்தையை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்க வைக்க அறந்தாங்கிக்கு அழைத்து வந்தார் முத்துலட்சுமி.

சம்பவ நாளன்று முத்துலட்சுமியும் இரண்டாவது கணவருக்கு பிறந்த 3 குழந்தைகளும் வீட்டில் இல்லாத சமயத்தை பயன்படுத்திக்கொண்டு ரவி சந்திரன், சேகரின் மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இதனால் அந்த பெண் கர்ப்பமாகியுள்ளார். இந்த விவகாரம் தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்த முத்துலெட்சுமி, அறந்தாங்கி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து, விசாரணைக்கு பின்னர் போலீஸார் ரவிச்சந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...