மாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா?

பிப்ரவரி 21, 2019 358

சென்னை (21 பிப் 2019): 5 மற்றும் 8ம் வகுப்புக்கு தமிழக அரசு அறிவித்துள்ள் பொதுத்தேர்வு குறித்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு அறிவித்தது. கடந்த மாதம் இந்த அறிவிப்பு வெளியாக நிலையில், இந்த திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது.

இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை, மேல்நிலை, மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டே பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதனால் மாணவர்கள் மட்டுமல்ல பெற்றோர்களூம் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இவ்விவகாரம் மாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதாக விமர்சனம் எழுந்துள்ளது.

இதற்கிடையே இதுகுறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தலாம் என மத்திய அரசு முடிவு செய்திருக்கலாம், ஆனால் தமிழக அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார். எனினும் துறை ரீதியாக தயார் நிலையில் உள்ளதாக அவர் தகவல் அளித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...