தமிழகத்தில் ஒரே நாளில் 2,396 பேருக்கு கொரோனா பாதிப்பு!

388

சென்னை (20 ஜூன் 2020): தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 2,396 பேருக்கு கொரோனா பாதிப்பு உறதி செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ள நிலையில் இந்தியாவிலும் அது அதி வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா முதலிடத்திலும் தமிழகம் இரண்டாமிடத்திலும் உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 2,396 பேருக்கு கொரோனா பாதிப்பு உறதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 56,845 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 39,641 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,045 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் தமிழகத்தில் 31,316 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார்கள்.

ஒரே நாளில் மட்டும் 38 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 704 ஆக அதிகரித்துள்ளது.