பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் பலி!

பிப்ரவரி 22, 2019 417

நெல்லை (22 பிப் 2019): நெல்லை அருகேயுள்ள வரகனூரில் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

சங்கரன்கோவில் அடுத்த வரகனூரில் குணா என்ற பெயரில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று காலையில் 40க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தீடீரென பயங்கர சப்தத்தோடு வெடிமருந்து வைக்கப்பட்டிருந்த அறையில் வெடிச் சத்தம் கேட்டுள்ளது. இதனை தொடர்ந்து பற்றிய தீ ஆலை முழுவதும் பரவியது. ஆலையின் சுவர்கள் இடிந்து பணியாளர்களின் மீதே விழுந்துள்ளன.

இந்த வெடி விபத்தினால் 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

போலிசாரின் முதற்கட்ட விசாரணையில் வெடிமருந்து அழுத்தத்தினால் வெடிவிபத்து ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...