தமிழக அரசியலில் அதிரடி திருப்பம் - ஸ்டாலின் விஜய்காந்த் சந்திப்பு!

பிப்ரவரி 22, 2019 466

சென்னை (22 பிப் 2019): தமிழக அரசியலில் அதிரடிதிருப்பமாக தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்திற்கே நேரில் சென்று சந்தித்து மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

இன்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் வீட்டுக்கு திடீரென வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும், அவருடன் சென்ற திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியனையும், தேமுதிக கூட்டணி பேச்சுவார்தத்தை குழு தலைவர் சுதீஷ் வாசலில் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.

20 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது விஜயகாந்த் குடும்பத்தினரும், தேமுதிக முக்கிய நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், தாமும் விஜயகாந்தும் நீண்ட கால நண்பர்கள் என்பதையும், அவர் தம்மை அண்ணன் என அழைக்கும் முறையையும் நினைவுகூர்ந்தார். கலைஞர் மறைவின்போது விஜயகாந்த் வெளியிட்ட வீடியோ உருக்கமாக இருந்தது என்பதையும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

விஜயகாந்த் உடல்நலம் குறித்து நேரில் விசாரிக்கவே தாம் வந்ததாகவும் அவர் கூறினார். கூட்டணி குறித்து பேசப்பட்டதா என செய்தியாளர்கள் கேட்டபோது, அரசியல் பேசுவதற்காக தாம் வரவில்லை என்று மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். கூட்டணிக்கு தேமுதிக வந்தால் வரவேற்பீர்களா என செய்தியாளர்கள் வினவியபோது, தங்களின் நல்ல எண்ணத்திற்கு பாராட்டு, நன்றி என திமுக தலைவர் கூறினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...