திமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக் கடன் ரத்து!

பிப்ரவரி 23, 2019 308

கிருஷ்ணகிரி (23 பிப் 2019): திமுக ஆட்சி அமைத்தால் மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளியில் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

பின்னர் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று கூறினார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது மாணவர்களின் கல்விக் கடன் ரத்து குறித்த அறிவிப்பு, திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று இருந்ததாகக் கூறிய ஸ்டாலின், இந்த முறையும் அந்த அறிவிப்பு இடம்பெறும் என்று உறுதி அளித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...