அதிமுக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி படம்!

பிப்ரவரி 24, 2019 348

சென்னை (24 பிப் 2019): சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி படம் மாட்டப் பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப் படுகிறது. இதனை அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்

இந்நிலையில் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் பல்வேறு தலைவர்களின் படங்கள் மாட்டப் பட்டுள்ளன. அதில் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைப்பது போன்ற புகைப்படமும் உள்ளது.

அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் பாஜகவின் ஆதிக்கம் அதிமுகவில் அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...