சென்னை பேரூரில் பயங்கர தீ விபத்து - 200 க்கும் அதிகமான கார்கள் எரிந்து நாசம்!

பிப்ரவரி 24, 2019 396

சென்னை (14 பிப் 2019): சென்னையை அடுத்த போரூர் அருகே தனியார் வாகன நிறுத்துமிடத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 200க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன.

சென்னை போரூரில் உள்ள தனியார் கார் குடோனில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் விரைந்து இருக்கிறார்கள். இதில் 200க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமாகியுள்ளன. அனைத்தும் ஒரே நிறுவனத்திற்கு சொந்தமான கார்கள் என கூறப்படுகிறது.

நேற்று பெங்களூரில் எலஹாங்க பகுதியில் விமான கண்காட்சி நடைபெற்றது. இந்த விமான கண்காட்சியின் போது எதிர்ப்பாராமல் ஏற்பட்ட விபத்தில் கார்கள் தீப்பிடித்து எரிந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...