திமுகவுடன் கூட்டணி? உண்மையை உடைத்த பிரேமலதா விஜய்காந்த்!

பிப்ரவரி 24, 2019 435

சென்னை (24 பிப் 2019): பிரேமலதா விஜய்காந்த் திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் என்பதை நாசூக்காக கூறியுள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில், தேமுதிகவை இழுக்க திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஒருவாரத்திற்கும் மேலாக வெளிப்படையாக அதிமுக, தேமுதிகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், தொகுதிப் பங்கீடு சிக்கல் காரணமாக இழுபறி நீடித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் தான், கடந்த 21ம் தேதி திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசர், விஜயகாந்தை அவர் வீட்டுக்கே நேரடியாக சென்று சந்தித்தார். இதில், அரசியல் குறித்தும் விவாதிக்கப்பட்டது என்று தெரிவித்த திருநாவுக்கரசர், ‘நாட்டின் நலன் கருதி நல்ல முடிவு எடுக்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.

அதற்கு மறுநாளே, ரஜினிகாந்த், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் விஜயகாந்தை அவர் வீட்டிற்கு சென்று சந்தித்தனர். அதனை தொடர்ந்து ஸ்டாலினும், சதித்துப் பேசிவிட்டு சென்றார். ‘நாங்கள் அரசியல் பேசவில்லை. அவர் உடல் நலத்தை விசாரிக்கவே வந்தேன். அவர் நல்ல உடல் நலத்துடன் இருந்து, தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்’ என்று கூறிவிட்டுச் சென்றார்.

இந்தச் சூழ்நிலையில், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு வினியோகம் செய்து தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதாவிடம், ‘அதிமுக அல்லது திமுக கூட்டணியில் தேமுதிக இணைய வாய்ப்புள்ளதா?’ என்று எழுப்பப்பட்டது.

அதற்கு, “மக்களவை தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 300க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு பெற்றுள்ளனர். தேமுகவின் பலம் என்ன என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. தேமுதிகவின் வாக்கு சதவீதம் மக்களுக்கு தெரியும். அதற்குரிய கவுரவம் அளிக்கப்படும் என்று நம்புகிறோம். உரிய இடங்கள் கிடைத்தால் மட்டுமே நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்கப்படும்.

தேமுதிகவின் பலத்துக்கேற்ற கட்சியுடன் கூட்டணி அமைக்கும். தேமுதிக தலைவர் விஜயகாந்தை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்ததற்கு தேமுதிக சார்பில் நன்றி. ஸ்டாலின் சந்தித்ததில் நலம் விசாரிப்பு மட்டுமல்ல, அரசியலும் பேசப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் எங்களுக்கும், திமுகவுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை . என்றார்.

இதன் மூலம் தேமுதிக திமுக கூட்டணியில் இணையவே அதிக வாய்ப்பு உள்ளது என தெரிகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...