ஒருதலைக் காதல் - ஆசிரியையை கொலை செய்த இளைஞர் தற்கொலை!

பிப்ரவரி 25, 2019 363

கடலூர் (25 பிப் 2019): ஒருதலைக் காதலால் ஆசிரியையை கொலை செய்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் . இவரது மகள் ரம்யா(22) தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். ரம்யாவை குறிஞ்சிப்பாடி அருகே உள்ள விருட்சம்குப்பத்தைச் சேர்ந்த ராஜசேகர் ஒருதலையாக காதலித்து வந்தார்.

இந்நிலையில் ராஜசேகர், ரம்யாவின் வீட்டிற்கே சென்று பெண் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு ரம்யாவின் தந்தை சுப்பிரமணியன் முடியாது என்று மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர் சம்பவத்தன்று பள்ளிக்கு வந்து வகுப்பறையில் அமர்ந்து இருந்த ரம்யாவை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் ரம்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ரம்யாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தக் கொலைக்கு காரணமான ராஜசேகரை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று காலை சேந்தநாட்டில் உள்ள முந்திரி தோப்பில் ராஜசேகர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...