மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்துக்கள் கணக்கை வெளியிட நீதிமன்றம் உத்தரவு!

பிப்ரவரி 28, 2019 224

மதுரை (28 பிப் 2019): மதுரை மீனாட்சி கோவில் , ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சொத்துக்கள் எவ்வளவு? என அறநிலையத்துறை ஆணையர் அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட 4 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகள் அறநிலையத்துறை ஆணையர் அனுமதியின்றி விற்கப்பட்டுவிட்டதாகவும், மீட்க நடவடிக்கை கோரியும் வழக்கு தொடரப்பட்டிருதது.

மீனாட்சி அம்மன் கோவிலின் அசையும், அசையா சொத்துகள், கட்டளைதாரர்கள், நன்கொடையாளர்கள் வழங்கிய சொத்துகள், அவை யார் கட்டுபாட்டில் உள்ளன? ஆக்கிரமித்துள்ளவர்கள் யார்? என்றும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சொத்து விவரங்கள் குறித்தும் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற, வருவாய்த் துறை, நகராட்சி நிர்வாகத்துறை ஒத்துழைப்புக் கொடுக்கத் தவறினால் துறைரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்படும் என்றும் கூறி விசாரணையை மார்ச் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...