மோடியே திரும்பிப்போ... கருப்புக்கொடியுடன் வைகோ முழக்கம்!

மார்ச் 01, 2019 301

நெல்லை (01 மார்ச் 2019): நெல்லை, கன்னியாகுமரி எல்லையான காவல் கிணறு பகுதியில் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரவித்து வைகோ தமது கருப்பு கொடி போராட்டத்தை தொடங்கி உள்ளார்.

தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிப்பதாக பிரதமர் மோடிக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த முறை அவர் திருப்பூர் வந்த போது கருப்பு கொடி காட்டப்பட்டது.

கன்னியாகுமரியில் 40 ஆயிரம் கோடி திட்டங்களை தொடங்கி வைக்க அவர் இன்று தமிழகம் வருகிறார். அவரது வருகையை கண்டித்து... கருப்புக்கொடி காட்டப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்திருந்தார்.

அதன்படி.... அவர் தொண்டர்களுடன் நெல்லை, கன்னியாகுமரி எல்லையான காவல் கிணறு பகுதியில் திரண்டார். காவல் கிணறறு பகுதியில் அவர் பிரதமர் மோடியை கண்டித்து போராட்டத்தில் இறங்கினார்.

தொண்டர்கள் முன்னிலையில் உரையாற்றிய வைகோ... மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு செய்த துரோகங்கள் எவை என்று அவர் பட்டியலிட்டு ஆவேசமாக பேசினார். அப்போது மோடியே திரும்பி போ என்று மதிமுகவினர் முழக்கமிட்டனர்.

கருப்புக் கொடி போராட்டம் காரணமாக... கன்னியாகுமரி மாவட்ட எல்லைக்குகள் வைகோவை அனுமதிக்க போலீசார் மறுத்துவிட்டனர். பாதுகாப்பு பணிக்கான ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...