சென்னை விமான நிலையத்திற்கு திடீர் பாதுகாப்பு அதிகரிப்பு!

மார்ச் 03, 2019 323

சென்னை (03 மார்ச் 2019): சென்னை விமான நிலையத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது.

புல்வாமா பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளிடையே பதற்றம் நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயணிகளை வழியனுப்ப வரும் பார்வையாளர்கள் விமான நிலையத்திற்குள் நுழையத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயணிகள் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் அவர்களுடைய லக்கேஜ்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

முன்னதாக, புலனாய்வுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்கள், அனைத்து மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரையும் உஷார்படுத்தி இருக்கிறது..

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...