திமுக கூட்டணியிலிருந்து விலகுகிறதா விடுதலை சிறுத்தைகள் கட்சி?

மார்ச் 03, 2019 527

சென்னை (03 மார்ச் 2019): திமுக கூட்டணியில் ஒரு சீட் மட்டுமே விசிக வுக்கு ஒதுக்குவதால் அதிருப்தியில் உள்ளது விசிக.

திமுக தோழமைக் கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது. விடுதலை சிறுத்தைகள், மதிமுக மற்றும் இடதுசாரிகள் கட்சிகளுடன் இன்னும் பேச்சுவார்த்தை இழுபறியாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். அந்த சந்திப்பில், விசிகவுக்கு ஒரு சீட் தருவதாகச் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். ஆனால் இதனை ஏற்காமல் கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்துவிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் கட்சி நிர்வாகிகள் திமுகவின் நிலைப்ப்பாட்டில் திருப்தி அடையாததால் சீடு ஒதுக்குவதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...