விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

மார்ச் 04, 2019 340

சென்னை( 04 மார்ச் 2019): விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக தோழமைக் கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது. சில கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை இழுபறியாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். அந்த சந்திப்பில், விசிகவுக்கு ஒரு சீட் தருவதாகச் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். ஆனால் இதனை ஏற்காமல் கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்துவிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விசிகவுக்கு திமுக கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...