அதிமுக பிரமுகருக்கும் ஆபாச படத்திற்கும் தொடர்பு - கை வைக்க தயங்கும் போலீஸ்!

மார்ச் 04, 2019 489

பொள்ளாச்சி (04 மார்ச் 2019): பொள்ளாச்சியில் மாணவிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டியவர் அதிமுக பிரமுகர் என்பதால் போலீஸ் கை வைக்க தயங்கியதாக தெரிகிறது.

பொள்ளாச்சி பகுதியில் கல்லூரி மாணவிகளை ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக புகார் வந்ததை அடுத்து பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி சில கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தலைமறைவாகியுள்ள குற்றவாளி திருநாவுக்கரசை கைதுசெய்ய வேண்டுமென திமுக உள்ளிட்ட கட்சிகள் பலகட்ட போராட்டங்கள் நடத்தினர். மேலும் மாதர் சங்கமும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டன.

ஆனால் திருநாவுக்கரசு அதிமுகவைச் சேர்ந்தவர் என்பதால் தான் அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

எனவே திருநாவுக்கரசை கைது செய்ய வேண்டும் என பல அமைப்பினர் போராட்டம் நடத்திவருகின்ற நிலையில், அரசுக்கு நெருக்கடி அதிகரிக்கிறது. எனவே திருநாவுக்கரசர் கைது செய்யப்படக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...