திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி வடிவம் பெற்றது - ஸ்டாலின்!

மார்ச் 05, 2019 367

சென்னை (05 மார்ச் 2019): திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி வடிவம் பெற்றது. என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் 10 விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 இ.கம்யூனிஸ்ட் 2 பச்சை முத்து 1 மதிமுக 1 இ.முஸ்லிம் லீக் 1 என்ற நிலையில் கூட்டணியில் இடம் பெற்ற மமகவுக்கு சீட் ஒதுக்கவில்லை.

இந்நிலையில் தொகுதி பங்கீடு முடிந்து விட்டதாகவும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து இன்னும் இரண்டு தினங்களில் முடிவு செய்யப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதற்கிடையே சீட் கிடைக்காத மமகவிடம் ஆதரவை திமுக கோரியுள்ளது. ஆனால் மமகவின் முடிவு என்ன என்பது குறித்து இன்று மாலை தெரியும் என எதிர் பார்க்கப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...