பள்ளி மாணவிக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்த பெற்றோர் - அதிர்ச்சி சம்பவம்!

மார்ச் 06, 2019 377

தருமபுரி (06 மார்ச் 2019): தருமபுரி அருகே திருமணத்திற்கு உடன்படாத பள்ளி மாணவிக்கு பெற்றோரே உணவில் விஷம் கலந்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி அருகே 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் இந்த திருமணத்திற்கு மாணவி உடன்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மாணவியின் உணவில் விஷம் கலந்துள்ளனர். இதனை மாணவியின் மற்ற சகோதரிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்து மாணவியிடம் சொல்லியுள்ளனர்.

உடனே அந்த உணவுடன் மாணவி போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். உணவை உணவு பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைத்து சோதனை செய்ததில் விஷம் கலந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

உடன் பெற்றோரை கைது செய்த போலீசார் மாணவியையும் மற்ற இரு சகோதரிகளையும் குழந்தைகள் நல பாதுகாப்பில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...