சுரண்டை பேருந்து நிலைய புதிய கட்டிடம் திறப்பு விழா!

மார்ச் 08, 2019 250

நெல்லை (08 மார்ச் 2019): சுரண்டை மகாத்மா காந்தி பேருந்து நிலைய புதிய கட்டிடம் திறப்பு விழாவில் அமைச்சர் ராஜலட்சுமி எம்எல்ஏ செல்வ மோகன்தாஸ் பாண்டியன் பங்கேற்றனர்.

நெல்லை மாவட்டம் சுரண்டை டவுண் பஞ்சாயத்து மகாத்மா காந்தி பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு 48 ஆண்டுகள் ஆன நிலையில் மிகவும் பழுதடைந்து இருந்ததால் அதனை புதுப்பித்து கட்டித்தர வேண்டும் என இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தென்காசி எம்எல்ஏ செல்வ மோகன் தாஸ் பாண்டியன் முயற்சியினால் இப்பேருந்து நிலையம் ரூ 75 லட்சம் செலவில் புதுப்பிக்க கடந்த ஏப்ரல் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் விரைவாக முடிவடைந்த நிலையில் அதன் திறப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தலைமை வகித்து புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலைய கட்டிடத்தை திறந்து வைப்பு வாழ்த்துரை வழங்கினார். தென்காசி எம்எல்ஏ செல்வ மோகன்தாஸ் பாண்டியன். எம்பி முத்துக்கருப்பன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாஹின் அபுபக்கர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி நிர்வாக அதிகாரி பாபு வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் தச்சை கணேஷ் ராஜா, மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், ஒன்றிய செயலாளர் அமல்ராஜ், அரசு ஒப்பந்தகாரர் கரையாளனூர் சண்முகவேல், நகர செயலாளர் சக்திவேல், தென்காசி ஒன்றிய செயலாளர் சங்கரபாண்டியன், சங்கரன்கோவில் அந்தோணி, பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் ஜோதி முருகன், உதவி பொறியாளர் ஹரிஹரன், பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் மணிமுத்தாறு காளியப்பன், ஆய்குடி குமரேசன், சுந்தரபாண்டியபுரம் முரளி, கீழப்பாவூர் கண்மணி, சுரண்டை பே ாலீஸ் இன்பெக்டர் மாரீஸ்வரி, நகர அவைத் தலைவர் முருகையா, பொருளாளர் கோபால், ஜவஹர் தங்கம், ஜெயபிரகாசம், சங்கர், தேனம்ம்மாள் தங்கராஜ், அமராவதி சந்திரன், இந்திரா அழகுதுரை, கீழச் சுரண்டை மாரியப்பன், பேச்சிமுத்து பாண்டியன், ஏடி மூர்த்தி, குத்தாலிங்கம், வெள்ளைச்சாமி, கடற்கரை நாடார், ரவிச்சந்திரன், சிவா, சிவ சங்கர், ராஜேஷ், செல்வம், சங்கரபாண்டியன், ஜோயல், எஸ்கேடி ராஜா, மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...