சென்னை மத்திய தொகுதியில் களமிறங்கும் தெஹ்லான் பாக்கவி - கமீலா நாசர்!

மார்ச் 09, 2019 791

சென்னை (09 மார்ச் 2019): சென்னை மத்திய தொகுதியில் தயாநிதி மாறன் ஏற்கனவே போட்டியிடவுள்ள நிலையில் எஸ்டிபிஐ தெஹ்லான் பாக்கவியும், மக்கள் நீதிமய்யம் கமீலா நாசரும் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமுமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எஸ்டிபிஐ சார்பில் தெஹ்லான் பாக்கவில் மத்திய சென்னையில் போட்டியிடுவதாக கூறப்படுகிறது. மேலும் மக்கள் நீதிமய்யம் சார்பில் நாசரின் மனைவியான கமீலா நாசர். எம்.பில் பட்டதாரியான கமீலா நாசர், மக்கள் நீதி மய்யத்தின் உயர்மட்ட குழு உறுப்பினராகவும் உள்ளார்.

மத்திய சென்னை தொகுதிக்குள் வரும் துறைமுகம், சேப்பாக்கம், ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதிகளில் இஸ்லாமியர்கள் கணிசமாக உள்ளதாலும், வில்லிவாக்கம், எழும்பூர், அண்ணா நகர் பகுதிகளில் படித்தவர்கள், மத்திய தர வகுப்பினர் அதிகமாக உள்ளதாலும், கமீலா நாசரைக் களமிறக்கினால் வெற்றியை நெருங்கிட முடியும் என்று கமலஹாசன் கருதுகிறாராம். அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு சான்ஸ் கிடைக்கலாம் எனத் தெரிகிறது. பிரபலமான அரசியல் முக்கியஸ்தர்கள் போட்டியிட முடிவெடுத்துள்ளதால், மத்திய சென்னை தொகுதி நட்சத்திர அந்தஸ்தை இப்போதே பெற்றுவிட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...