சிறையில் வாடும் முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

மார்ச் 09, 2019 458

சென்னை (09 மார்ச் 2019): பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருடன் 20 ஆண்டுக்கும் மேலாக சிறையில் வாடும் 41 முஸ்லிம் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிறையில் வாடும் 41 முஸ்லிம்களை மனித நேயத்துடன் செயல்பட்டு விடுதலை செய்ய வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருடன் முஸ்லிமக்ளையும் விடுதலை செய்ய வேண்டும்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்த பழனிச்சாமி அரசு முஸ்லிம் என்பதற்காக 41 பேரையும் விடுதலை செய்யவில்லை. எங்கிருந்தோ வரும் அழுத்தத்திற்கு அஞ்சி முஸ்லிம்களை வஞ்சிக்காமல் உடனடியாக 41 கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...