BREAKING NEWS: திமுக கூட்டணிக்கு மனித நேய மக்கள் கட்சி தொடர்ந்து ஆதரவு!

மார்ச் 09, 2019 545

சென்னை (09 மார்ச் 2019): திமுக கூட்டணிக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கப்படும் என்று மனித நேய மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள மமகவுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் இடம் கிடைக்காத நிலையில் இன்று இந்த அறிவிப்பை மமக எடுத்துள்ளது.

முன்னதாக 9 ஆம் தேதி மாநில செயற்குழு கூட்டத்தில் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என்று மமக தரப்பில் அறிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் விழுப்புரத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்ட முடிவில் திமுக கூட்டணிக்கு ஆதரவளிக்கப்படும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்தார். அப்போது தமுமுக மாநில பொதுச் செயலாளர் ஹைதர் அலி உள்ளிட்ட தலைவர்கள் உடன் இருந்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...