டிடிவி தினகரன் கட்சியில் இணைந்த பிரபல பாடகர்!

மார்ச் 09, 2019 281

சென்னை (09 மார்ச் 2019): டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியில் பிரபல பாடகர் மனோ இணைந்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ளதால் தமிழக அரசியல் பரபரப்பாகவே உள்ளது. ஒவ்வொரு கட்சியிலும் நட்சத்திரங்கள் இணைவது வாடிக்கையாகி உள்ளது. இந்நிலையில் பிரபல பாடகர் மனோ, டிடிவி தினகரன் முன்னிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியில் இணைந்துள்ளார். இதற்கு முன்னர் பாமகவில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித் அமமுக கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமின்றி வேல்முருகன் கட்சி உள்பட சில கட்சிகள் தினகரனின் கட்சியுடன் கூட்டணி சேர முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...